தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே உள்ள கூத்தப்பாடி ஊராட்சிக்கு உட்பட்ட கே.புதூரில் சாலையோரம் உள்ள குப்பை தொட்டிகள் அனைத்தும் தலைகீழாக கிடக்கின்றன. பொதுமக்களின் பயன்பாட்டிற்காக வழங்க வேண்டிய குப்பை தொட்டிகள் பயன்படுத்தாமல் கவிழ்த்து வைக்கப்பட்டுள்ளன. மேலும் குப்பை தொட்டியின் அருகிலேயே குப்பைகளை கொட்டி தீ வைத்து எரிக்கின்றனர். இதனால் அந்த பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது. இதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
-காவியநந்தன், பென்னாகரம், தர்மபுரி.