கிருஷ்ணகிரியில் உள்ள திருவண்ணாமலை சாலையில் ராசு வீதி பகுதிகளில் குப்பைகள் ஆங்காங்கே கொட்டப்படுகின்றன. இதனால் அந்த சாலை வழியாக செல்லும் போது துர்நாற்றம் வீசுகிறது. மேலும் இந்த பகுதிகளில் சாலையில் வேகத்தடைகள் இருப்பதே தெரியவில்லை. இங்குள்ள சாலை குண்டும், குழியுமாக காணப்படுவதால் வாகனங்கள் தட்டுத்தடுமாறி செல்கின்றன. இதனை சரி செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
-ரமேஷ், கிருஷ்ணகிரி.