கோவை-சத்தி சாலையில் உள்ள குரும்பபாளையம் பகுதியில் சாக்கடை கால்வாயில் பிளாஸ்டிக் குப்பைகள் கொட்டப்படுகிறது. இதனால் அடைப்பு ஏற்பட்டு, கழிவுநீர் தேங்கி நிற்கிறது. இதனால் துர்நாற்றம் வீசுவதுடன், நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே சாக்கடை கால்வாயை தூர்வாருவதுடன், சாக்கடை கால்வாயில் பிளாஸ்டிக் கழிவுகளை கொட்டுபவர்கள் மீது சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.