கடலூர் சொரக்கல்பட்டில் உள்ள தனியாா் பள்ளியின் அருகில் அரசு தலைமை மருத்துவமனையில் உள்ள மருத்துவ கழிவுப்பொருட்களை தீ வைத்து கொளுத்துவதால் அதில் உருவாகும் நச்சுபுகையானது வகுப்புகளில் பரவி துர்நாற்றம் வீசுவதோடு, மாணவிகளுக்கு மூச்சுதிணறல் மற்றும் வாந்தி, மயக்கம் ஏற்படுகிறது. எனவே பள்ளியின் அருகில் மருத்துவ கழிவுகளை தீவைத்து எரிப்பதை தடுக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.