கள்ளக்குறிச்சி மாவட்டம் பூட்டை-சங்கராபுரம் சாலையில் இந்தியன் வங்கி அருகே குப்பைகள் அதிக அளவில் குவித்து வைக்கப்பட்டுள்ளது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு துர்நாற்றம் வீசுவதால் பொதுமக்களுக்கு பலவித நோய் பரவும் நிலை உருவாகியுள்ளது. எனவே குப்பைகளை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.