கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை 9-வது வார்டு நேரு தெருவில் குப்பை தொட்டி இல்லை. இங்கு ஏராளமான பூ, தேங்காய் கடைகள் உள்ளன. கெலமங்கலம் மெயின் ரோட்டை இணைக்கும் இந்த சாலை நடுவே அனைத்து குப்பைகளையும் பூக்கடைக்காரர்கள் கொட்டுகின்றனர். இதனால் அங்கு போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதுடன் சுகாதார கேடும் ஏற்படுகிறது. எனவே அந்த பகுதியில் குப்பை தொட்டி அமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
-பிரகாஷ், கிருஷ்ணகிரி.