திருப்பூர் அனுப்பர்பாளையம் புதூர் பஸ் நிறுத்தம் பகுதியில் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியின் நுழைவு வாயில் முன்பு குப்பை தொட்டி வைக்கப்பட்டுள்ளது. இதனால் மாணவ-மாணவிகள் மூக்கை பிடித்தபடி செல்லும் நிலை உள்ளது. மேலும் குப்பையின் துர்நாற்றம் வகுப்பைக்குள் புகுந்து மாணவ-மாணவிகளை திணறடிக்கிறது. எனவே குப்பை ெதாட்டியை அங்கிருந்து அப்புறப்படுத்த வேண்டும்.