திருப்பூர் கணியாம்பூண்டியில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் ஏராளமான மாணவ-மாணவிகள் படித்து வருகிறார்கள். ஆனால் பள்ளியின் அருகில் குப்பை கொட்டப்படுகிறது. இந்த குப்பை அள்ளப்படுவது இல்லை. சில நேரங்களில் அந்த குப்பைக்கு தீ வைக்கப்படுகிறது. இதில் இருந்து கிளம்பும் புகை பள்ளி வகுப்பறையில் படிக்கும் குழந்தைகளை கடுமையாக பாதிக்கிறது. இந்த பாதிப்பை அந்த குழந்தைகள் யாரிடம் போய் சொல்லும். அரசு தொடக்கப்பள்ளி என்றால் அதன் அருகில் குப்பை, கூழங்களை கொட்டலாமா? இங்கு கொட்டப்பட்ட குப்பையை உடனே அகற்ற வேண்டும். குப்பை கொட்டுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஏன் எனில் பள்ளியில் படிப்பது நம் மாணவ செல்வங்கள்.