சேலம் இரும்பாலை ரோடு மஜ்ரா கொல்லப்பட்டி ஊராட்சி அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனைக்கு உட்பட்ட மருந்து கிடங்கு அருகில் சேலம் மாவட்ட உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் மூலம் கைப்பற்றப்பட்ட சுமார் 30-க்கும் மேற்பட்ட வாகனங்கள் கடந்த ஒரு ஆண்டுக்கு மேலாக அங்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இதனால் அந்த பகுதி குற்ற சம்பவங்கள் நடைபெறும் இடமாக உள்ளது. மேலும் அங்கு குப்பைகள் அதிக அளவில் கொட்டப்பட்டு சுகாதார கேடும் ஏற்பட்டுள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்
-பி.ராஜாகிள்ளிவளவன், வட்டமுத்தாம்பட்டி, சேலம்.