தர்மபுரி மாவட்டம் கோணங்கிஅள்ளி ஊராட்சி பி.அக்ரஹாரம் கிராமத்தில் முனியப்ப சுவாமி கோவிலுக்கு செல்லும் சாலையின் இருபுறமும் பல்வேறு வணிக நிறுவனங்கள் செயல்பட்டு வருகிறது. இப்பகுதிகளில் இருந்து சேரும் குப்பைகள் ஊராட்சி அலுவலகம் முன்பு குவித்து வைக்கப்பட்டுள்ளன. இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதுடன் சுகாதார கேடும் ஏற்பட்டுள்ளது. எனவே குப்பைகளை உடனே அகற்ற வேண்டும் என அப்பகுதி மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.
-ஜீவன், தர்மபுரி.