பெரம்பலூர் நகரப்பகுதியில் உள்ள வீடுகளில் சேகரிக்கப்படும் குப்பைகள் சாலை ஓரத்தில் ஆங்காங்கே கொட்டப்பட்டு வருகிறது. இதனால் இப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு நோய் பரவும் அபாயம் உள்ளது. மேலும் சிலர் இந்த குப்பைகளுக்கு தீ வைத்து செல்வதினால் அவற்றிலிருந்து வெளியேறும் புகையால் முதியவர்கள் மூச்சு திணறல் காரணமாக பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். எனவே இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.