நாமக்கல் நகரின் மைய பகுதியில் மலைக்கோட்டை அடிவாரத்தில் கமலாயகுளம் அமைந்து உள்ளது. இந்த குளத்தில் சமீபத்தில் பெய்த மழை காரணமாக தண்ணீர் நிரம்பி காணப்படுகிறது. இந்த தண்ணீரில் பிளாஸ்டிக் பாட்டில்கள் மற்றும் பல்வேறு கழிவுகள் மிதக்கின்றன. இவற்றை அகற்றி தண்ணீர் தூய்மையாக இருக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.