சுகாதார கேடு

Update: 2022-09-26 16:03 GMT

தர்மபுரி மாவட்டம் ஏரியூரில், பஸ் நிலையம், கடைவீதி, இந்தியன் வங்கி, நியாய விலை கடை ஆகியவை அமைந்துள்ள முக்கியமான இடத்தில் குப்பை மலை போல் குவிந்து கிடக்கிறது. இதில் ஓட்டல் கழிவுகளும் கொட்டப்படுவதால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது. மேலும் தெருநாய்கள் குப்பைகளை ஆங்காங்கே இழுத்து சென்று வீசுவதால் அப்பகுதி முழுவதும் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. இதனை சரிசெய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

- சபரி ராஜ், பென்னாகரம், தர்மபுரி.

மேலும் செய்திகள்