ஆனைமலை காந்தி ஆசிரமம் செல்லும் வழியில் சாலையின் இருபுறமும் குப்பைகள் கொட்டப்பட்டு மலைபோல் குவிந்து கிடக்கிறது. இதனால் அந்தப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. மேலும் தொற்றுநோய் ஏற்படும் அபாயமும் உள்ளது. இதேபோல் 2 சக்கர வாகனங்களில் செல்பவர்களின் கண்களில் குப்பைகளில் இருந்து பறக்கும் தூசுகள் படுகிறது. இதனால் அவர்கள் நிலைதடுமாறி கீழே விழுந்து விடுகிறார்கள். எனவே குவிந்து கிடக்கும் குப்பைகளை உடனடியாக அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் முன்வருவார்களா?