கோவை தொண்டாமுத்தூர் தொகுதிக்குட்பட்ட 86-வது வார்டு பிலால் எஸ்டேட் முதலாம் வீதியில் தூய்மை பணியாளர்களால் சாக்கடை கழிவுகள் அகற்றப்பட்டது. ஆனால் அந்த கழிவுகள் சாலையில் குவித்து வைக்கப்பட்டு உள்ளன. இதனால் குழந்தைகள் வீதியில் விளையாடுவதாலும் நோய் தொற்றும் அபாயமும், சாலைகளில் வாகனங்கள் நிறுத்துவதற்கும் இடையூறாகவும் உள்ளது. எனவே இந்த சாக்கடை கழிவுகளை சாலையிலிருந்து உடனடியாக அகற்றப்பட வேண்டும். அதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?