நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தை அடுத்த ஆலாம்பாளையம் பேரூராட்சிக்கு உட்பட்ட 13-வது வார்டு ஆயக்கட்டூர் பகுதியில் குப்பை கிடங்கு உள்ளது. அந்த இடத்தில் நேற்று முன்தினம் மர்ம நபர்கள் குப்பைகளுக்கு தீ வைத்துள்ளனர். இதனால் 2 நாட்களாக குப்பைகள் எரிந்து அப்பகுதி புகைமண்டலமாக காட்சி அளிக்கிறது. இதனால் பொதுமக்கள், சிறுவர்கள் கண் எரிச்சல், இருமல் போன்ற உடல் உபாதைகளால் பாதிப்படைகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.