குவிந்து கிடக்கும் குப்பைகள்

Update: 2022-09-18 11:08 GMT

ஆனைமலை அடுத்த முக்கோணம் பாலம் பகுதியில் சிலர் பிளாஸ்டிக் கழிவுகள், எச்சில் இலைகள் போன்ற குப்பைகளை கொட்டி செல்கின்றனர். அதனால் தற்போது குப்பைகள் மலைபோல் குவிந்து கிடக்கிறது. இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது. மேலும் பல்ேவறு சுகாதார சீர்கேடு ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே குவிந்து கிடக்கும் குப்பைகளை அகற்றுவதோடு, குப்பைகளை அங்கு கொட்டுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். 

மேலும் செய்திகள்