சுகாதார சீர்கேடு

Update: 2022-07-13 15:25 GMT

கிருஷ்ணகிரி நகரில் இருந்து திருவண்ணாமலை செல்லும் சாலையில் சாலை ஓரமாக கோழி கழிவுகள் தினமும் மூட்டை மூட்டையாக கட்டி கொட்டப்படுகின்றன. இதனால் அந்த பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது. வாகன ஓட்டிகள் செல்ல மிகவும் சிரமத்திற்கு உள்ளாகிறார்கள். தினமும் இரவு நேரங்களில் சரக்கு வாகனங்களில் வந்து கோழி கழிவுகளை மூட்டை மூட்டைகளாக கட்டி போட்டுச் செல்கிறார்கள். எனவே இரவு நேரங்களில் அந்த பகுதிகளில் அதிகாரிகள் கண்காணித்து கோழி கழிவுகளை சாலையோரங்களில் கொட்டுவதை தவிர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்