குவிந்து கிடக்கும் குப்பைகள்

Update: 2022-09-16 11:50 GMT

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் தாலுகா சின்னசேலம் ஒன்றியம் நாககுப்பம் கிராமம் அரசு மேல்நிலைப் பள்ளி அருகே குப்பைகள் மலை போல் குவிந்து கிடக்கிறது. இதனால் சுகாதார சீா்கேடு ஏற்பட்டு, துர்நாற்றம் வீசுவதால் மாணவர்களுக்கு தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. இதுகுறித்து அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே குப்பைகளை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.

மேலும் செய்திகள்