சேலம் மாவட்டம் அழகாபுரம் நகரமலை அடிவாரம் பகுதியில் கடந்த சில மாதங்களாக குப்பை தொட்டி இல்லாத காரணத்தால் குப்பைகளை சாலைகளில் வீசி வருகின்றனர். அழகாபுரம் தண்ணீர் தொட்டி பகுதி முதல் நகரமலை அடிவாரம் வரை உள்ள அனைத்து இடங்களிலும் குப்பை தொட்டிகள் இல்லாததால் அந்த பகுதியில் தூர்நாற்றம் வீசுவதுடன் நோய் பரவும் அபாயமும் அதிகரித்துள்ளது. எனவே சுகாதார சீர்கேட்டை தடுக்க இங்கு குப்பை தொட்டிகளை வைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
-சுதாகர், சேலம்.