நாகர்கோவில் அறுகுவிளையில் திருவள்ளுவர் தெரு உள்ளது. இந்த தெருவில் அமைக்குப்பட்டுள்ள டிரான்ஸ்பார்மர் அருகில் சிலர் குப்பைகளை கொட்டி வந்தனர். இதனால், அந்த பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு துர்நாற்றம் வீசி வந்தது. இதுபற்றி தினத்தந்தி புகார்பெட்டியில் செய்தி வெளியிடப்பட்டது. இதையடுத்து செய்தி வெளியிட்ட அன்றே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து குப்பைகளை அகற்றினர். நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும், செய்தியை வெளியிட்ட தினத்தந்திக்கும் அப்பகுதி மக்கள் நன்றி தெரிவித்தனர்.
-விஜய், அறுகுவிளை.