நாகர்கோவில் ஒழுகினசோியில் பழையாறு ஓடுகிறது. இந்த ஆற்றின் கரை பகுதிகளில் கட்டிட கழிவுகள், குப்பைகளை சிலர் கொட்டி வருகின்றனர். இதனால், அந்த பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு துர்நாற்றம் வீசி வருவதுடன் தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, ஆற்றின் கரைகளில் தேங்கி கிடக்கும் குப்பைகளை அகற்றுவதுடன், குப்பைகளை கொட்டுவதை தடுக்கவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-சிவராஜன், ஒழுகினசேரி.