தர்மபுரி மாவட்டம் ஏரியூர் அருகே உள்ள பத்திரஅள்ளி ஊராட்சிக்குட்பட்ட பூச்சூர்-ஏரியூர் பிரதான சாலையோரம் குப்பைகளை கொட்டி தீ வைத்து எரிக்கின்றனர். இதனால் அந்த வழியாக செல்லும் பயணிகள், பொதுமக்களுக்கு மூச்சுத் திணறல் ஏற்படுகிறது. மேலும் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. எனவே சாலையோரம் குப்பையை கொட்டியை எரிப்பதை தடுக்க வேண்டும்.