திருவள்ளூர் மாவட்டம் ஆர்.கே. பேட்டை வட்டம் செல்லாதூர் கிராமத்தின் கிளை நூலகத்தை பொதுமக்கள், மாணவ-மாணவிகள் என அனைத்து தரப்பினரும் பயன்படுத்தி வருகிறார்கள். ஆனால் இதனருகில் விலங்கு கழிவுகள், குப்பைகள் கொட்டப்பட்டு பயங்கர துர்நாற்றம் வீசுகிறது. இதனால் வாசகர்கள் மிகவும் சிரமப்படுகிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட துறை சார்ந்த அதிகாரிகள் கழிவுகளை அகற்றிட உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.