சேலம் ஜாகீர்சின்ன அம்மாபாளையம் 19-வது வார்டு அங்கன்வாடி பள்ளி அருகே குப்பை தொட்டியை முறையாக பராமரிக்கவில்லை. பொது மக்கள் குப்பைகளை சாலைகளில் வீசி வருகின்றனர். அந்த பகுதியில் துர்நாற்றம் வீசுவதுடன் நோய் பரவும் அபாயமும் உள்ளது. எனவே அதிகாரிகள் இந்த குப்பைகளை அகற்றி குப்பை தொட்டிகளை முறையாக பராமரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-விஜயகுமார், ஜாகீர் சின்ன அம்மாபாளையம், சேலம்.