குப்பைகளால் சுகாதார கேடு

Update: 2022-09-09 17:05 GMT

சேலம் மாவட்டம் ஓமலூர் தாலுகா அண்ணாநகர் மேற்கு தெரு தனியார் திருமண மண்டபம் அருகில் சாலையோரங்களில் மருத்துவ கழிவுகள் உள்ளிட்ட குப்பைகள் கொட்டப்படுகின்றன. இந்த குப்பைகளை உடனுக்குடன் அப்புறப்படுத்தாமல் இருப்பதால் அந்த பகுதியில் துர்நாற்றம் வீசுவதுடன் நோய்பரவும் அபாயமும் உள்ளது. இது குறித்து பலமுறை புகார் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே இந்த குப்பைகளை அகற்ற அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-சேவியர், ஓமலூர், சேலம்.

மேலும் செய்திகள்