குப்பை கிடங்காக மாறிய ஏரி

Update: 2022-09-08 17:00 GMT

நாமக்கல் மாவட்டம் மோகனூர் தாலுகா வளையப்பட்டி கிராமத்தில் அமைந்துள்ள தாய்மான் ஏரியில் கடந்த ஒரு வருடமாக பஞ்சாயத்து மூலமாக கொட்டிய குப்பைகள் அகற்றப்படவில்லை. ஊர் பொதுமக்கள் சார்பில் அதிகாரிகளிடம் பலமுறை கூறியும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஏரி முழுவதும் குப்பை காடாக காட்சியளிக்கிறது. வடகிழக்கு பருவமழை தொடங்கும் நிலையில் ஏரிக்கு தண்ணீர் வரும் பட்சத்தில் நிலத்தடி நீர் முழுவதும் பாதிப்பிற்குள்ளாகும். எனவே அதிகாரிள் இந்த குப்பபைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-கோகுல்ஆனந்த், வளயப்பட்டி, நாமக்கல்.

மேலும் செய்திகள்