திருப்பூர் சிறுபூலுவப்பட்டி பிரதான சாலையில் பஸ் நிறுத்தம் அருகில் குப்பை குவிந்து கிடக்கிறது. இதனால் துர்நாற்றம் வீசுவதோடு, ஈ, கொசு தொல்லை அதிகரித்து விட்டது. அந்த பகுதியில் அதிக எண்ணிக்கையில் குழந்தைகள் விளையாடுவார்கள். எனவே அவர்களுக்கு தொற்றுநோய் பரவ வாய்ப்பு உள்ளது. எனவே குவிந்துகிடக்கும் குப்பைகளை உடனே அப்புறப்படுத்த வேண்டும்.