சேலம் மாவட்டம் ஓமலூர் சேலம் மெயின் ரோட்டில் தனியார் பள்ளி அருகே உள்ள ஓடையில் குப்பைகள், கோழிக்கழிவுகள் கொட்டப்படுகிறது. இதனால் அந்த ஓடையில் துர்நாற்றம் வீசுவதுடன் சுகாதார கேடு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக பள்ளியில் படிக்கும் மாணவிகள் மற்றும் இந்த வழியாக செல்லும் பொது மக்கள் சிரமத்திற்குள்ளாகிறார்கள். எனவே இந்த ஓடையில் குப்பைகள் கொட்டப்படுவதை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
முருகேசன், ஓமலூர், சேலம்.