--- சாலையோரம் கொட்டப்படும் குப்பைகள்

Update: 2022-09-07 17:09 GMT

நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூரில் இருந்து ஜேடர்பாளையம் செல்லும் சாலையில் பாண்டமங்கலம் தனியார் பள்ளி அருகே பாலம் ஒன்று உள்ளது. இப் பாலத்திற்கு அருகில் அப்‌பகுதியைச் சேர்ந்த வர்த்தக நிறுவனத்தினர் மற்றும் அப்பகுதியை சேர்ந்தவர்கள் குப்பைகள், அழுகிய பொருட்கள், பழைய துணிகள் ஆகியவற்றை போட்டுவிட்டு செல்கின்றனர். இதனால் அப்பகுதியில் துர்நாற்றமும், நோய் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. எனவே சாலையோரம் குப்பைகள் கொட்டப்படுவதை தடுக்க வேண்டும்.

-ஆனந்தன், நாமக்கல்.

மேலும் செய்திகள்