தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி தாலுகா வெங்கடசமுத்திரம் முதல்நிலை ஊராட்சியில் சக்திநகரில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசித்து வருகிறார்கள். இந்த சக்திநகர் சாலை அருகே குப்பை தொட்டியில் தேங்கிய குப்பைகள் பல நாட்களாக அள்ளப்படாமல் இருப்பதால் தெரு நாய்கள், குப்பைகளை கிளறுகிறது. சாலையில் செல்லும் பொதுமக்கள் பள்ளி மாணவ- மாணவிகளுக்கு தொற்று நோயால் காய்ச்சல் பாதிப்பு ஏற்படுகிறது. இதனால் குப்பைகளை தினமும் அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்
-கண்ணன், சக்தி நகர் பாப்பிரெட்டிப்பட்டி, தர்மபுரி.