நோய் பரவும் அபாயம்

Update: 2022-09-06 17:45 GMT

நாமக்கல் மாவட்டம் புதன் சந்தை பகுதியில் உள்ள இறைச்சி வியாபாரிகள் சிலர் கழிவுகளை சந்தை வளாகத்திற்குள்ளே கொட்டி செல்கின்றனர். அந்த கழிவுகளை சாப்பிட சந்தை வளாகத்திற்குள் தெருநாய்கள் கூட்டம் கூட்டமாக சுற்றித் திரிகின்றன. இதனால் அந்த பகுதியில் துர்நாற்றம் வீசுவதுடன் நோய் பரவும் அபாயம் உள்ளது. மேலும் சந்தைக்கு வரும் பொதுமக்கள் மூக்கை பிடித்து கொண்டு செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே அங்கு இறைச்சி கழிவு கொட்டுவதற்கு தடை செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-பிரபாகரன், நாமக்கல்.

மேலும் செய்திகள்