குப்பைகள் அள்ளப்படுமா?

Update: 2022-09-06 14:21 GMT


திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் பேரூராட்சி பகுதியான உப்பு கார தெரு பகுதியில் குப்பைகள் அள்ளப்படாமல் தேங்கி கிடக்கிறது. தற்போது மழை பெய்வதால் குப்பைகள் அழுகி துர்நாற்றம் வீசுவதோடு தொற்று நோய் பரவும் அபயாம் உள்ளது. இதனால் பொதுமக்கள் பெரிதும் அவதிப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து தேங்கி கிடக்கும் குப்பைகளை அள்ளவேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொதுமக்கள், வலங்கை மான்

மேலும் செய்திகள்