திருப்பூரில் ஆங்காங்கே குப்பை சேகரிக்க மாநகாட்சி சார்பில் குப்பை ெதாட்டி வைக்கப்பட்டுள்ளது. இந்த குப்பை தொட்டி நிரம்பியுடன் அவற்றை முறையாக அப்புறப்படுத்த தாமதம் ஏற்படுகிறது. இதனால் குப்பையை பொதுமக்கள் சாலையில் கொட்டி செல்கிறார்கள். இப்படி சாலையில் குப்பை கொட்டப்படுவதால் காற்று வீசும்போது அவை சாலை முழுவதும் சிதறிக்கிடக்கிறது. திருப்பூர் கருவம்பாளையம் தாடிக்காரன் முக்கு பகுதியில் குப்பை அதிக அளவில் சாலையில் கிடக்கிறது. எனவே குப்பை தொட்டியில் குப்பை நிறைந்தவுடன்அவற்றை உடனுக்குடன் அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.