சேலம் மாவட்டம் பொன்னம்மாப்பேட்டை அண்ணாநகர் முதல் தெருவில் குப்பை தொட்டி இல்லாததால் குப்பைகள் சாலையோரம் கொட்டப்படுகின்றன. இதனால் அந்த தெருவில் துர்நாற்றம் வீசுவதுடன் நோய் பரவும் அபாயமும் உள்ளது. எனவே அதிகாரிகள் அந்த தெருவில் குப்பை தொட்டி வைத்து குப்பைகளை குப்பை தொட்டியில் போட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ராகுல், சேலம்.