குப்பை கழிவுகள் அகற்றப்படுமா?

Update: 2022-09-04 16:39 GMT

தர்மபுரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம், மாவட்ட தீயணைப்பு அலுவலகம், அண்ணாநகர், கருவூல காலனி மற்றும் பிரசித்தி பெற்ற அருளீஸ்வரர் கோவில் போன்ற பகுதிகளுக்கு செல்லும் பிரதான சாலையில் ஏராளமான குப்பை கழிவுகள் குவிந்து கிடக்கிறது. இதனால் இந்த சாலை வழியாக செல்வோர் மிகுந்த பாதிப்புக்கு உள்ளாகிறார்கள். குறிப்பாக அங்குள்ள கோவிலுக்கு வரும் பக்தர்கள் முகம் சுளிக்கும் நிலை ஏற்படுகிறது. அந்த குப்பைகளில் இருந்து வீசும் துர்நாற்றத்தால் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. குப்பை கழிவுகளை உடனடியாக அகற்ற ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா?

-வேணுகோபால், கருவூல காலனி, தர்மபுரி.

மேலும் செய்திகள்