குப்பைகள் தேங்கி கிடப்பதை படத்தில் காணலம்
மயிலாடுதுறை மாவட்டம் மல்லியத்திலிருந்து வாணாதிராஜபுரம் செல்லும் சாலையில் குப்பைகள் பல நாட்களாக அகற்றப்படாமல் உள்ளது. இதனால் அந்த பகுதியில் துர்நாற்றம் வீசுவதோடு தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. இதானல் அந்த பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் பெரிதும் சிரமப்படுகின்றனர். பள்ளி செல்லும் மாணவ-மாணவிகள் மற்றும் முதியவர்கள் பெரிதும் அவதிப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து குப்பைகளை அகற்ற முன் வர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சண்முகம், மயிலாடுதுறை