சுகாதார சீர்கேட்டில் சின்ன ஏரி

Update: 2025-12-21 13:33 GMT

கிருஷ்ணகிரி புதிய பஸ் நிலையம் பின்புறம் சின்ன ஏரி அமைந்துள்ளது. இந்த ஏரியில் ஆகாயத்தாமரைகள் படர்ந்து காணப்படுகின்றன. மேலும் பஸ் நிலையம் பகுதியில் இருந்து நாள்தோறும் குப்பைகள் இந்த ஏரியில் கொட்டப்படுகின்றன. இதனால் ஏரி சுகாதார சீர்கேடு நிறைந்து காணப்படுகிறது.

மேலும் இரவு நேரங்களில் கட்டிட கழிவுகளும் இங்கு கொட்டப்படுகிறது. எனவே பஸ் நிலையம் பின்புறம் நகரின் மைய பகுதியில் அமைந்துள்ள இந்த ஏரியை புனரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்