சுகாதார சீர்கேடு

Update: 2025-12-21 16:21 GMT

கரூர் மாவட்டம் காதப்பாறை ஊராட்சி நாவல் நகர் அருகே உள்ள காமராஜர் நகர் பஸ் நிறுத்தம் எதிரே அப்பகுதியில் சேகரமாகும் குப்பைகள் கொட்டப்படுகிறது. இந்த குப்பைகள் கடந்த 3 மாதங்களாக அகற்றப்படாமல் உள்ளது. இதனால் அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. மேலும் மழை பெய்யும்போது குப்பைகளில் மழைநீர் தேங்கி துர்நாற்றம் வீசுவதால், அவ்வழியாக செல்லும் பொதுமக்கள் மூக்கை பிடித்துக்கொண்டு செல்கின்றனர். எனவே குப்பைகளை அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்