தஞ்சை பழனியப்பா நகர் பகுதியில் சாலையோரத்தில் குப்பைகள் குவிந்துகிடக்கின்றன. இதனால் அந்த பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது. இதன்காரணமாக சுகாதார சீர்கேடு ஏற்பட்டு தொற்றுநோய்கள் பரவும் அபாயம் உள்ளது. மேலும், குவிந்து கிடக்கும் குப்பைகளில் இரைதேடி கால்நடைகள் அதிகளவில் வருகின்றன. இதன்காரணமாக அந்த வழியாக செல்லும் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் குவிந்து கிடக்கும் குப்பைகளை அகற்ற நடவடிக்கை எடுப்பார்களா?