தர்மபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி வெள்ளிசந்தை செல்லும் சாலையோரத்தில் அதிக அளவில் குப்பை கழிவுகள் கொட்டப்படுகின்றன. வேகமாக காற்று வீசும்போது வாகனத்தில் செல்பவர் மீதும், நடந்து செல்லும் பொதுமக்கள் மீதும் குப்பை தூசிகள் பறந்து வந்து விழுகின்றன. இதனால் அந்த பகுதியில் சுகாதார கேடு ஏற்பட்டு வருகிறது. இங்கு குப்பை கொட்டுவதை தவிர்க்கவும் அல்லது குப்பை தொட்டி வைத்து அதில் குப்பைகளை சேகரித்து அப்புறப்படுத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ஜனார்த்தனன், மாரண்டஅள்ளி, தர்மபுரி.