நோய் பரவும் அபாயம்

Update: 2022-09-03 11:19 GMT

கோவை மாநகராட்சி 77-வது வார்டுக்கு உட்பட்ட பாண்டியன் நகரில் சாலையோரம் குப்பை தொட்டிகள் வைக்கப்பட்டு உள்ளன. அந்த தொட்டிகளில் குப்பைகள் கொட்டப்பட்டு, நிரம்பி வழிகிறது. ஆனால் இதுவரை அப்புறப்படுத்தப்படவில்லை. இதன் காரணமாக அங்கு சுகாதார சீர்கேடு ஏற்பட்டு உள்ளது. மேலும் மழை பெய்து வருவதால் துர்நாற்றம் வீசி வருகிறது. இதனால் அங்கு வசிக்கும் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும் தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்