குனியமுத்தூர் இரும்பு நடைபாதை அருகே சில இடங்களில் குப்பை தொட்டிகள் இல்லாததால் பொதுமக்கள் அந்த பகுதியில் குப்பைகளை போட்டுவிட்டு செல்கின்றனர். இதனால் அந்த பகுதி முழுவதும் தூர்நாற்றம் வீசுவதுடன், நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே குனியமுத்தூர் பகுதியில் குப்பை தொட்டிகள் இல்லாத இடத்தில் குப்பை தொட்டிகள் வைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.