நாமக்கல் உழவர்சந்தை அருகே உள்ள சாக்கடை கால்வாயில் குப்பைகள் தேங்கி கிடக்கிறது. அதனால் கழிவுநீரும் செல்லாமல் தேங்கும் சூழல் உள்ளது. அதன் காரணமாக துர்நாற்றம் வீசுவதோடு, சுகாதார சீர்கேடு ஏற்படும் சூழல் உருவாகி உள்ளது. அதை தவிர்க்க அங்குள்ள குப்பைகளை அகற்றி சாக்கடை கால்வாயை தூர்வார நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.