தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் நாகமரை பிரதான சாலையில் ஏரியூர் பகுதிகளில் இருந்து சேகரிக்கப்படும் குப்பைகளை கொட்டுகின்றனர். இந்த குப்பைகளால் அந்த சாலையை கடக்க முடியாமல் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். மேலும் துர்நாற்றம் வீசுவதுடன் சுகாதார கேடும் ஏற்பட்டுள்ளது. இந்த குப்பைகள் மற்றும் பிளாஸ்டிக் கழிவுகளை ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகள் தின்பதால் கால்நடைகளுக்கு நோய் பரவும் அபாயமும் உள்ளது. அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து குப்பைகளை அகற்ற வேண்டும்.
-விவேக்குமார், ஏரியூர், தர்மபுரி.