திருவள்ளூர் மாவட்டம் வெங்கல் கிராமத்தில் உள்ள அரசு மருத்துவமனை அருகே குப்பை தொட்டிகளில் பிளாஸ்டிக் பைகள் அதிகளவு எரிக்கப்படுகின்றன. இவை தினந்தோறும் எரிக்கப்படுவதால் அப்பகுதியில் காற்று மாசுபடுவதோடு சுகாதார சீர்கேடு ஏற்பட்டு நோய் தொற்று பரவும் நிலையுள்ளது. பெண்கள், முதியோர் என வந்து செல்லும் மருத்துவமனை அருகில் இருப்பதால் பிளாஸ்டிக் எரிப்பதை தடுப்பதோடு மேலும் இது போன்ற செயல்கள் தொடராமல் இருக்க நிரந்தர தீர்வு காணப்பட வேண்டும்.