பஸ் நிலையத்தில் சுகாதார சீர்கேடு

Update: 2022-03-04 13:55 GMT
சென்னை பாரிமுனை பஸ் நிலையத்தில் நுழையும் வழிகளில் திறந்த வெளியில் சிறுநீர் கழித்தல், குப்பை கழிவுகள் கொட்டப்படுவது போன்ற நிகழ்வுகள் அடிக்கடி நடந்து வருகிறது. இதனால் பஸ் நிலையத்தில் துர்நாற்றம் வீசுவதோடு சுகாதார சீர்கேடு ஏற்பட்டு நோய் தொற்று பரவும் நிலையுள்ளது. மேலும் பஸ் ஏற வரும் பயணிகள் முகம் சுழிக்கும் வகையில் இது போன்ற செயல்களில் சிலர் ஈடுபடுகின்றனர். இது போன்ற செய்ல்களை தடுத்து பஸ் நிலையத்தை மேம்படுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்