சென்னை செனாய் நகர் கந்தன் தெரு வைத்தியநாதன் தெரு சந்திப்பில் குப்பைகள் குவிந்து அலங்கோலமாக காட்சியளிக்கிறது. குப்பைகள் அகற்றப்படாததால் துர்நாற்றம் வீசுவதால் அந்த வழியே செல்லும் பாதசாரிகள் மூக்கை பொத்திக்கொண்டு செல்லும் நிலை நிலவுகிறது. சுகாதார சீர்கேடு ஏற்பட்டு நோய் பரவும் அபாயம் இருப்பதால் மாநகராட்சி ஊழியர்கள் கவனித்து குப்பைகளை அகற்ற வேண்டும்.