நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலத்தில் வரலாற்று புகழ்வாய்ந்த சோமேஸ்வரர் கோவில் உள்ளது. அந்த கோவிலுக்கு அருகே பழமை வாய்ந்த தெப்பக்குளம் உள்ளது. இந்தநிலையில் அந்த குளத்தில் இருந்து கழிவுநீர் வெளியேறும் வாய்க்கால் அடைக்கப்பட்டதால் குளம் முழுவதும் கழிவு பொருட்கள் தேங்கி கிடக்கிறது. பல ஆண்டுகளாக இதேநிலையில் காணப்படுவதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. எனவே அதனை தூர்வார வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
-தர்மா, சேந்தமங்கலம், நாமக்கல்.