குப்பை தொட்டி வேண்டும்

Update: 2022-08-25 14:12 GMT


திருவாரூர் மாவட்டத்திலேயே மிகப் பெரிய ஊராட்சியாக உள்ள தண்டலை மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகளில் குப்பைகள் கொட்ட இடம் இல்லாமல் பொதுமக்கள் சாலையில் குப்பைகளை கொட்டி வருகின்றனர். இதனால் இந்த பகுதியில் துர்நாற்றம் வீசுவதோடு தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. குப்பைகள் கொட்ட இடமில்லாமல் ஆங்காங்கே குப்பைகள் எரிக்கப்படுகிறது . இதனால் காற்று மாசு ஏற்படுவதுடன் நடைபயிற்சி செய்பவர்கள் மிகவும் சிரமப்படுகின்றனர் . எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து குப்பைகள் கொட்ட குப்பை தொட்டி வசதி வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்